tamilnadu

img

வலைப்பதிவு : மக்கள் பசி மற்றும் பட்டினியில்...

சமூக கட்டுப்பாடுகளை அமலாக்குவதன் மூலம் முழு ஊரடங்கை தவிர்க்க கேரளா முயல்கிறது. எனினும் மோசமான சூழலை உறுதியோடு எதிர்கொள்ள தயாராகி கொண்டுள்ளோம். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உருவாக்கப்படும் கோவிட் முதல்நிலை சிகிச்சைமையங்களில் ஒரு  இலட்சம்படுக்கைகள் தயார்ப்படுத்த படுகின்றன. இந்த சிகிச்சை மையங்கள் “கோவிட் பிரிகேட்” எனப்படும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களால் நிர்வகிக்கப்படும்.

=============

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஆவணமே இல்லாமல் போக்குவரத்தில் கொண்டு செல்லமுடிகின்ற ஒரு பொருளை யாவது நீங்கள் காட்ட முடியுமா? பொருளின் மதிப்பு ரூ 50,000க்கும் அதிகம் எனில் இ-வே பில் எனப்படும் எலக்
ட்ரானிக் ரசீது தேவை. ஆனால் இது தங்கத்துக்கு பொருந்துவது இல்லை. தங்கம் இ-வே பில்வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என கேரளா போராடுகிறது. ஆனால் பா.ஜ.க. எதிர்ப்பது ஏன்?

டாக்டர் தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர்

=-===============

உர்ஜித் பட்டேலுக்கு பிறகு ரிசர்வ் வங்கியின் முன்னாள் உதவி இயக்குனர் விரால் ஆச்சார்யா வும் தனது புதிய புத்தகத்தில்,கடன் திருப்பாத கார்ப்ப ரேட்டுகள் மீது ரிசர்வ் வங்கிமென்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்அவர்களுக்கு உதவ வேண்டும்எனவும்  மோடி அரசாங்கம் வற்புறுத்தியதாக கூறுகிறார். மக்களே கவனியுங்கள்.

இதழியலாளர் எம்.கே.வேணு

=======

உ.பி.யில் ஆக்ரா அருகேகாக்கர்புரா என்ற கிராமத்தில் பூஜா என்ற பெண் இறந்தார். அவரது உடல் எரியூட்டப்பட்ட நிலையில், பாதியிலேயே எடுக்கப்பட்டு 4 கி,மீ. தள்ளி மீண்டும் எரியூட்டப்பட்டது. காரணம்? அந்த பெண் கீழ்சாதி என ‘மேல் சாதி’ தாக்கூர் சாதியினர் ஆட்சேபணை கூறியதால்! எத்தனை பெரிய பயங்கரம் இது!

அனுராதா சுக்லா

===========

இந்தியாவில் மார்ச் முதல் ஜூன் வரை சிறு குறு தொழிலில் மட்டும் 2.5 கோடி முதல் 3 கோடிப் பேர் வேலை இழந்தனர். ஆகஸ்டில் மேலும் 1.5 கோடி முதல் 2 கோடி வேலைவாய்ப்புகள் காணாமல் போகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அக்கார் பட்டேல்

==============

சூரத்தில் வணிகர் காதர்ஷேக் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கில் செலவு செய்து குணம் அடைந்தார். ஏழைகள் என்ன செய்வார்கள் என யோசித்தார். 30,000சதுர அடி உள்ள தனது அலு வலகத்தை 80 படுக்கைகள் கொண்ட கோவிட் மருத்துவமனையாக மாற்றி சூரத்நகராட்சியிடம் ஒப்படைத்தார். ஐ.சி.யூ. செலவுகளை யும் ஏற்றுக்கொண்டார். முக்கியமானது: இந்த மருத்துவ மனையில் அனுமதிக்க சாதி/ மதம் தடையில்லை. இருண்ட காலத்தில் ஒரு நம்பிக்கை கீற்று.

ஹர்ஷ் மந்தர், மூத்த பத்திரிகையாளர்

=================

வரலாறு காணாத விளைச்சல்; வரலாறு காணாத அறுவடை; வரலாறு காணாத அளவில் உணவு பொருட்கள் கையிருப்பு. எனினும் மக்கள் பசி மற்றும் பட்டினியில்.

அஷோக் தவாலே, விவசாயிகள் சங்கத் தலைவர்

$$$$$$$$$$$$$$$$

தொகுப்பு : அ.அன்வர் உசேன்

;